தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'இன்பினிட்டி பார்க்' - மாற்றுத்திறனாளி சிறுவர்களின் உலகம்! - Infiniti Park in Chennai

சென்னை: மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கென்று, 'இன்பினிட்டி பார்க்' எனும் உயர்தரப் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு சிறப்பு பூங்கா  - சிறப்பு தொகுப்பு
சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு சிறப்பு பூங்கா - சிறப்பு தொகுப்பு

By

Published : Feb 29, 2020, 1:59 AM IST

சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஸ்மார்ட் சிட்டி அமைப்புடன் இணைந்து மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கென சென்னை சாந்தோமில் இன்பினிட்டி பார்க் எனும் உயர்தரப் பூங்காவை உருவாக்கியுள்ளது.

பல மெனக்கெடல்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பூங்காவின் தரைகள் அனைத்தும் பல்வேறு வண்ணங்களில் ரப்பர், பைபர் உள்ளிட்டவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு சிறப்பு பூங்கா

எந்த இடத்தில் இருக்கிறோம், எங்கு செல்ல வேண்டும், என்ன செய்கிறோம் என்பதை உணர்த்த தொடு உணர்வுகளில் புரிந்துகொள்ளும் வசதிகள், நுழைவு வாயில் முதல் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல வீல் சேர்கள், பல்வேறு அரிய வகை விளையாட்டு வசதிகள் என சிறுவர்கள் அனைவரையும் விளையாடத் தூண்டுகிறது இந்தப் பூங்கா.

இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கென்று முதல் முறையாக அமைக்கப்பட்ட பூங்கா இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

'ஒருபுறம் நரசிம்மர்! மறுபுறம் ஆஞ்சநேயர்!' - சிலைக்குள் ஒளிந்துள்ள கலை

ABOUT THE AUTHOR

...view details