மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் உறவினர்களான தீபா, தீபக் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு, அவர்களும் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தனர். மேலும், வருமான வரி பாக்கி 40 கோடி ரூபாய் இருப்பதால் ஜெயலலிதாவின் வேதா இல்லம் உட்பட சில சொத்துகள், வருமானவரித்துறையால் முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.