தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுத்தேர்வு சிறப்பு மையம்! - பொதுத்தேர்வு

சென்னை: கட்டுப்படுத்தப்பட்டப் பகுதிகளில் 75-க்கும் மேல் சிறப்புத் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

exam
exam

By

Published : May 29, 2020, 2:59 PM IST

பலத்த எதிர்ப்புக்கிடையே, வரும் ஜூன் 15 ஆம் தேதிமுதல் பொதுத்தேர்வுகள் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, சென்னையில் ஜூன் 8 ஆம் தேதிமுதல் அனைத்துப் பள்ளிகளிலும் வளாகம், வகுப்பறை, கழிப்பறை ஆகிய இடங்களிலும், தேர்வு தொடங்குவதற்கு முன்னும், பின்னும் தேர்வு அறை முழுவதும் கிருமி நாசினி தெளித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு தேர்வு மையத்திலும் சோப்பு, கிருமிநாசினி கொண்டு கை கழுவத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதை உறுதிசெய்யவும், தகுந்த இடைவெளியுடன் தேர்வு எழுதவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாவட்டத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வுக்கு 161 மையங்களும், 11ஆம் வகுப்புத் தேர்வுக்காக 412 தேர்வு மையங்களும், 10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்காக 577 தேர்வு மையங்களும் தயார் நிலையில் உள்ளன.

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தற்போதுவரை 75 சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஆசிரியர்களையே தேர்வுப் பணிக்குப் பயன்படுத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் நாள்களில் பள்ளி வாயில், வளாகத்தில் தகுந்த இடைவெளி கடைப்பிடித்தலை அறிவுறுத்த காவலர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: டிஜிபி அலுவலகத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details