தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 6, 2020, 7:36 AM IST

ETV Bharat / city

3 அவதூறு வழக்குகளில் ஸ்டாலின் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன்

தமிழ்நாடு அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகளில் டிச.,2 ஆம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராகும்படி எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

summon to Stalin
summon to Stalin

சென்னை :கடந்த ஜனவரி 27ஆம் தேதி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு அரசை விமர்சித்துப் பேசினார்.

கடந்த ஜூன் 5ஆம் தேதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து ஸ்டாலின் ட்விட்டரில் சில கருத்துகளைப் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல், முதலமைச்சர் பழனிசாமி குறித்து ஸ்டாலின் பேசியது, முரசொலி பத்திரிகையில் செய்தியாக வெளியானது. இந்த மூன்று விவகாரங்கள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு தரப்பில் தனித்தனியாக அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள, எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி கே.ரவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மூன்று வழக்குகளிலும் டிசம்பர் 2ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பாணை அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு அதிமுக அரசு செய்துள்ள அடுத்த துரோகம் இது!

ABOUT THE AUTHOR

...view details