சென்னை:வீட்டில் வேலை செய்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமாரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ராஜ்குமார், அவரது நண்பர் ஜெய்சங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, இருவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.
பெரம்பலூர் தொகுதியின் முன்னாள் திமுக சட்டபேரவை உறுப்பினர் எம்.ராஜ்குமார், அவரது வீட்டில் வேலைசெய்த கேரளாவைச் சேர்ந்த 15 வயதே நிரம்பிய சிறுமியின் உடல்நிலை மோசமானதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதித்து விட்டதாகவும் சிறுமியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் சானிடைசரை குடித்த 9 பேர் உயிரிழப்பு!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட சிறுமி சிகிச்சைப் பலனின்றி இறந்து போனதைத் தொடர்ந்து, இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல் துறையினர் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். உடற்கூறாய்வு அறிக்கையில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
திமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் இதையடுத்து, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமார், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், ஹரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம் ஆகியோர் மீது ஆள்கடத்தல், பாலியல் வன்புணர்வு, கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை, குழந்தைகள் பாதுகாப்பு ஆகிய சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து ராஜ்குமார் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரின் நண்பர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ராஜ்குமார் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால் பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு சென்னையிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
போலி சான்றிதழ்களைப் பயன்படுத்திய கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷ்!
வழக்கின் விசாரணை முடிவடைந்து 2018ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ. சாந்தி, குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமாருக்கு பாலியல் வன்புணர்வு, மரணம் நிகழும் என தெரிந்தே குற்றம் செய்தல், கூட்டு சதி ஆகிய பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 30,000 ரூபாய் அபராதமும் விதித்து அதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். நண்பர் ஜெயக்குமாருக்கும் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.