தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையிலிருந்து 350 சிறப்புப்பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு போக்குவரத்துத்துறை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையிலிருந்து 350 சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 30, 2022, 7:58 PM IST

சென்னை:விநாயகர் சதுர்த்தியையொட்டி, 'சென்னையிலிருந்து 350 சிறப்புப்பேருந்துகள் இன்று (ஆக.30) முதல் அனைத்து இடங்களுக்கும் இயக்கப்பட உள்ளன.

பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவுப்போக்குவரத்துக்கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து தங்கள் ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேற்படி, சேவையை பயணிகள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது' என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

விழாக்காலங்களில் வெளியூர் செல்லும் பயணிகள் ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கும் கட்டணத்தில் விரும்பி தான் பயணிக்கின்றனர் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா வந்த வரலாறு

ABOUT THE AUTHOR

...view details