தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுகவினர் பரப்புரையின் போது கண்ணியமாக பேச வேண்டும் - ஸ்டாலின் - mk stalin statement

ஸ்டாலின்
ஸ்டாலின்

By

Published : Mar 27, 2021, 4:46 PM IST

Updated : Mar 27, 2021, 5:28 PM IST

16:43 March 27

திமுகவினர் பரப்புரையின் போது கண்ணியமாக பேச வேண்டும் என அக் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக உறுப்பினர்கள் மக்களிடையே பரப்புரை செய்யும்போது கழக மரபையும் மாண்பையும் மனதில் வைத்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். வெற்றிக்கு முன், வெற்றிக்கான பாதையும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது. அப்படிப்பட்ட சொற்கள் உதிர்த்திடுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும். இத்தகைய பேச்சுகளைக் கழகத் தலைமை ஒருபோதும் ஏற்காது. 

பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு ஆகிய மூன்றில், பேச்சாளர்களின் முதன்மை அம்சமாக இருக்கவேண்டியது கண்ணியமாகும். அதை நினைவில் கொண்டு பேச வேண்டும். சிலர், திமுகவினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டியும், ஒட்டியும் தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைக்கின்றனர்.

அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில், கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா மற்றும் பேச்சாளரும், திமுக கொள்கைப் பரப்பு துணை செயலாளருமான திண்டுக்கல் லியோனியின் தேர்தல் பரப்புரை கருத்துக்கள் சர்ச்சையாகுள்ளாகிய நிலையில் இவ்வாறு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க:ஸ்டாலின் என்னிடம் என்ன சந்தேகம் வேண்டுமானாலும் கேட்கட்டும் - எடப்பாடி

Last Updated : Mar 27, 2021, 5:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details