பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
அவரது உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் நேற்று (ஆகஸ்ட் 14) அறிக்கை வெளியிட்டிருந்தது. எஸ்.பி.பி. உடல் நிலைக் குறித்த இந்தச் செய்தியானது திரையுலக்கத்தினர், அவரது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.
அவர் விரைவில் குணமடைய வேண்டுமென இளையராஜா, பாரதிராஜா, ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோர் பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில், எஸ்.பி.பி. உடல் நிலைகுறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று (ஆகஸ்ட் 15) அறிக்கை வெளியிட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராகவுள்ளது எனவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவரை மருத்துவர்கள் கவனமாக கண்காணித்து வருகின்றனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மோசமான நிலையிலில் இருந்த எஸ்.பி.பி. உடல் நிலை முன்னேற்றம் கண்டுள்ளது என்ற செய்தி அவர் ரசிகர்களுக்கு நிம்மதியை தந்துள்ளது.
இதையும் படிங்க:பாலு சீக்கிரமா எழுந்து வா... உனக்காக காத்திருக்கிறேன் - இளையராஜா உருக்கம்!