தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தென் மேற்கு பருவமழை தீவிரம்: மீட்பு படை குழுக்கள் தயார் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்‌.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை தீவிரம்
தென்மேற்கு பருவமழை தீவிரம்

By

Published : Aug 2, 2022, 9:08 PM IST

சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்‌.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

எனவே பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார் என கூறினார்.

மேலும், மாவட்டத்தில் அமைச்சர்கள் தொடர்ந்து களத்தில் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக கூறிய அவர், குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மாநிலத்தின் கண்காணிப்பு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஊட்டி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தேசிய மீட்பு படை, தமிழ்நாடு மீட்பு படை தயாராக உள்ளதாகவும் கூறினார்.

அதேபோல், ஒவ்வொரு மணி நேரமும் முதலமைச்சர் மழையின் நிலவரத்தை கேட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், பயிர் சேதங்கள் கணக்கெடுத்து எடுத்து உரிய நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், மின்தடை இல்லாத சூழ்நிலை உருவாக மின்சாரம் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:Video: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் யானை; மீட்புப்பணிகள் தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details