தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'வழக்கம் போல் நாளை ரயில்கள் இயக்கப்படும்' தென்னக ரயில்வே! - News today

மே 1 ஆம் தேதி விடுமுறை தினத்தன்று வழக்கமான அட்டவணைப்படி ரயில் சேவைகள் இயக்கப்படும் என, தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Southern Railway
Southern Railway

By

Published : Apr 30, 2021, 8:33 PM IST

தொழிலாளர் தின மே 1 ஆம் தேதி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும். சென்னை புறநகர் சிறப்பு ரயில்கள் அனைத்தும் வார நாட்களில் வழக்கமாக இயக்கப்படும் அட்டவணைப்படி இயக்கப்படும் என, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
முன்னதாக, நாளை(மே.1) விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் கால அட்டவணைப்படி குறைவான ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று வார நாட்களில் இயக்கப்படுவது போல, 480 புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details