தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தென்னக ரயில்வேக்கு மத்திய அரசு விருது - தென்னக ரயில்வேக்கு மத்திய அரசு விருது

சென்னை: தேசிய அளவில் எரிசக்தி சிக்கனத்தில் சிறப்பாகச் செயலாற்றியதற்காக தென்னக ரயில்வேக்கு மத்திய அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது.

southern railway
southern railway

By

Published : Dec 17, 2019, 5:15 PM IST

எரிசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்தியதற்காக, தேசிய எரிசக்தித் திறன் அமைப்பு (Bureau of Energy Efficiency) தென்னக ரயில்வேக்கு மூன்று விருதுகள் வழங்கியுள்ளது.

போக்குவரத்துத் துறையில் எரிபொருள் சிக்கனத்திற்காக தென்னக ரயில்வே தலைமையகத்திற்கும் ரயில்வே பள்ளிகள் மத்தியில் எரிபொருளை தேவைக்கு ஏற்ப சிக்கனமாக பயன்படுத்தியற்காக ஈரோடு ரயில்வே பள்ளிக்கும் முதல் விருது கிடைத்துள்ளது. இதேபோல், கோவை மாவட்டத்தில் உள்ள போத்தனூர் ரயில்வே பள்ளிக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை இணையமைச்சர் ஆர்.கே. சிங் விருதுகளை வழங்கினார். தென்னக ரயில்வே அலுவலர்கள் இதனைப் பெற்றுக்கொண்டனர்.

ஆண்டுதோறும் டிசம்பர் 14ஆம் தேதி தேசிய எரிசக்தி சிக்கன நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details