இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இரண்டு ரயில்களின் பெயர்கள் மாற்றம்! - Chennai District News
சென்னை: சென்னையிலிருந்து புறப்படும் இரண்டு ரயில்களின் பெயர்களை மாற்றம் செய்து தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை எழும்பூர் - செங்கோட்டை ரயில் - வண்டி எண் 06181, சென்னை எழும்பூர்- செங்கோட்டை - காரைக்குடி ரயில் எனப் பெயர் மாற்றம்செய்யப்பட்டுள்ளது.
செங்கோட்டை - சென்னை எழும்பூர் விரைவு ரயில் - வண்டி எண் - 06182, செங்கோட்டை- காரைக்குடி- சென்னை எழும்பூர் ரயில் எனப் பெயர் மாற்றம்செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், வண்டி எண் - 02661 - சென்னை எழும்பூர் - செங்கோட்டை விரைவு ரயில் சென்னை எழும்பூர்- மதுரை- செங்கோட்டை விரைவு வண்டி எனப் பெயர் மாற்றம்செய்யப்பட்டுள்ளது.
வண்டி எண்- 02662 - செங்கோட்டை - சென்னை எழும்பூர் விரைவு ரயில், செங்கோட்டை -மதுரை- செங்கோட்டை ரயில் எனப் பெயர்மாற்றப்பட்டுள்ளது.
இரண்டு ரயில்களும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 15 நிமிட இடைவெளியில் செல்வதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கும்வகையில் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.