தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை-ரேணிகுண்டா ரயில் சோதனை ஓட்டம் - பொதுமக்களுக்கு தென்னக ரயில்வே எச்சரிக்கை!

சென்னை: ஆகஸ்ட் 11, 12 ஆகிய தேதிகளில் சென்னை -ரேணிகுண்டா, சென்னை-கூடுர் மார்க்கங்களில் ரயில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படவிருப்பதால் தண்டவாளத்தில் பொதுமக்கள் நடமாட வேண்டாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Southern Railway Announcement
Southern Railway Announcement

By

Published : Aug 10, 2020, 10:53 PM IST

தென்னக ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை-அரக்கோணம்-ரேணிகுண்டா மற்றும் சென்னை-கூடூர் மார்க்கங்களில் வரும் ஆகஸ்ட் 11, 12 தேதிகளில் ரயில்களுக்கான அதிவேக சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பிரத்யேக சோதனை ஓட்டத்தில் இருப்புப் பாதைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன. இந்தச் சோதனை ஓட்டத்தில் ரயில்கள் 143 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும்.

எனவே மேற்கூறிய மார்க்கங்களில் உள்ள ரயில்பாதை அருகாமையில் வசிக்கும் பொதுமக்கள் தண்டவாளங்களைக் கடக்கவோ அல்லது அதன் அருகே நடந்து செல்லவோ வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் நாள்கள்:

11.08.2020

(i) சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கம் , காலை 9 மணி முதல் மதியம் 12 வரை,

(ii) கூடூர் - சென்னை சென்ட்ரல் மார்க்கம் , மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை

12.08.2020

(i) சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்- ரேணிகுண்டா மார்க்கம், காலை 10 மணி முதல் மதியம் 12 வரை,

(ii) ரேணிகுண்டா - அரக்கோணம் - சென்னை சென்ட்ரல் மார்க்கம், மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details