தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முக்கிய ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் - முக்கியமான ரயில்களின் கால அட்டவணை

அக்டோபர் 1ஆம் தேதி முதல் முக்கியமான ரயில்களின் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முக்கிய ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம்
முக்கிய ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம்

By

Published : Sep 29, 2021, 10:04 AM IST

மதுரை:அக்டோபர் 1ஆம் தேதி முதல் சில முக்கிய சிறப்பு ரயில்களின் கால அட்டவணையில் சிறிய மாற்றங்கள் அமலுக்கு வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி,

  • "வண்டி எண் 06236 மைசூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில்; திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே காலை 06.35, 06.55, 07.10, 07.50, 08.05, 08.15, 08.40, 09.05, 09.25, 10.00 மணிக்கு பதிலாக காலை 06.25, 06.44, 07.00, 07.40, 07.53, 08.05, 08.25, 08.48, 09.15, 09.50 மணிக்கு புறப்படும்.
  • வண்டி எண் 07236 நாகர்கோவில் - பெங்களூரு சிறப்பு ரயில்; திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 09.05, 10.05, 10.25, 10.50, அதிகாலை 01.10 மணிக்கு பதிலாக 09.00, 09.55, 10.17, 10.40, அதிகாலை 01.00 மணிக்கு புறப்படும்.
  • வண்டி எண் 07235 பெங்களூரு - நாகர்கோவில் சிறப்பு ரயில்; திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 02.00, 03.00, 03.40, 04.05, 04.25, காலை 06.15 மணிக்கு பதிலாக அதிகாலை 01.55, 02.55, 03.35, 03.58, 04.20, 05.50 மணிக்கு புறப்படும்.
  • வண்டி எண் 06861 புதுச்சேரி - கன்னியாகுமரி சிறப்பு ரயில்; அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ரயில் நிலையங்களிலிருந்து இரவு 09.25, 10.15, 10.40, 11.05 மணிக்கு பதிலாக இரவு 09.20, 10.05, 10.28, 10.50 மணிக்கு புறப்படும்.
  • வண்டி எண் 06072 திருநெல்வேலி - தாதர் சிறப்பு ரயில்; கோவில்பட்டி, திண்டுக்கல் ரயில் நிலையங்களிலிருந்து முறையே காலை 08.12, 11.05 மணிக்கு பதிலாக காலை 08.10, 11.00 மணிக்கு புறப்படும்.
  • வண்டி எண் 06071 தாதர் - திருநெல்வேலி சிறப்பு ரயில்; மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே காலை 06.05, 06.50 மணிக்கு பதிலாக காலை 06.00, 06.45 மணிக்கு புறப்படும்.
  • வண்டி எண் 02627 திருச்சி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்; திருநெல்வேலியிலிருந்து நண்பகல் 12.15 மணிக்கு பதிலாக நண்பகல் 12.10 மணிக்கு புறப்படும்.
  • வண்டி எண் 02668 நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர சிறப்பு ரயில்; திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து இரவு 11.30, நள்ளிரவு 12.30, அதிகாலை 01.15, 02.45 மணிக்கு பதிலாக இரவு 11.25, நள்ளிரவு 12.20, அதிகாலை 01.10, 02.30 மணிக்கு புறப்படும்.
  • வண்டி எண் 06734 ஓகா - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்; மதுரையிலிருந்து மாலை 03.55 மணிக்கு பதிலாக மாலை 03.50 மணிக்கு புறப்படும்.
  • வண்டி எண் 06780 ராமேஸ்வரம் - திருப்பதி சிறப்பு ரயில்; மானாமதுரையில் இருந்து மாலை 05.00 மணிக்கு பதிலாக மாலை 04.57 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06779 திருப்பதி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து அதிகாலை 01.45 மணிக்கு பதிலாக அதிகாலை 01.40 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு அதிகாலை 05.10 மணிக்கு பதிலாக அதிகாலை 04.55 மணிக்கு சென்று சேரும்.
  • வண்டி எண் 02652 பாலக்காடு - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்; திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 07.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 07.40 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 02651 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - பாலக்காடு சிறப்பு ரயில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து முறையே காலை 06.15, 06.45, 07.25, 08.05 மணிக்கு பதிலாக காலை 06.05, 06.35, 07.15, 07.55 மணிக்கு புறப்படும்.
  • வண்டி எண் 06792 பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி சிறப்பு ரயில்; கிளிகொல்லூர், கொட்டாரக்கரா, புனலூர் ஆகிய ரயில் நிலைகளிலிருந்து முறையே இரவு 11.45, நள்ளிரவு 12.08, 12.45 மணிக்கு பதிலாக இரவு11.40, 11.58, நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படும்.
  • வண்டி எண் 06344 மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா சிறப்பு ரயில்; பழனி, உடுமலைப்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து மாலை 06.30, இரவு 07.05 மணிக்கு பதிலாக மாலை 06.20, இரவு 07.00 மணிக்கு புறப்படும்.
  • வண்டி எண் 06867 விழுப்புரம் - மதுரை சிறப்பு ரயில்; கொளத்தூர், மணப்பாறை, வையம்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 08.45, 09.00, 09.15 மணிக்கு பதிலாக இரவு 08.37, 08.52, 09.05 மணிக்கு புறப்படும்.
  • வண்டி எண் 06157 சென்னை எழும்பூர் - மதுரை சிறப்பு ரயில்; திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து காலை 06.45 மணிக்கு பதிலாக காலை 06.40 மணிக்கு புறப்படும்.
  • வண்டி எண் 06352 நாகர்கோவில் - மும்பை சிஎஸ்டி சிறப்பு ரயில்; விருதுநகர், மதுரை, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே காலை 09.45, 11.10, பகல் 12.15 மணிக்கு பதிலாக காலை 09.40, 11.00, பகல் 12.05 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06351 மும்பை சிஎஸ்டி - நாகர்கோவில் சிறப்பு ரயில் திண்டுக்கல், திருநெல்வேலி ரயில் நிலையங்களிலிருந்து அதிகாலை 01.40, 05.35 மணிக்குப் பதிலாக அதிகாலை 01.35, 05.25 மணிக்கு புறப்படும்.
  • வண்டி எண் 06012 ஹஸ்ரத் நிஜாமுதீன் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்; திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 10.40, 11.55, நள்ளிரவு 12.35, அதிகாலை 01.00 மணிக்கு பதிலாக இரவு 10.35, 11.50, நள்ளிரவு 12.25, 12.48 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06011 கன்னியாகுமரி - ஹஸ்ரத் நிஜாமுதீன் சிறப்பு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து இரவு 10.25 மணிக்கு பதிலாக இரவு 10.20 மணிக்கு புறப்படும்.
  • வண்டி எண் 02666 கன்னியாகுமரி - ஹவுரா சிறப்பு ரயில்; மதுரை, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே பகல் 11.10, 12.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக பகல் 11.00, 12.05 மணிக்கு புறப்படும்.
  • வண்டி எண் 02687 மதுரை - சண்டிகர் சிறப்பு ரயில்; திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவு 12.40 மணிக்கு பதிலாக நள்ளிரவு 12.35 மணிக்கும், வண்டி எண் 02688 சண்டிகர் - மதுரை சிறப்பு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து பகல் 12.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக பகல் 12.25 மணிக்கு புறப்படும்.
  • வண்டி எண் 06156 ஹஸ்ரத் நிஜாமுதீன் மதுரை சிறப்பு ரயில்; திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 10.40 மணிக்கு பதிலாக இரவு 10.35 மணிக்கு புறப்படும்.
  • வண்டி எண் 06054 பிகானீர் - மதுரை சிறப்பு ரயில்; திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ரயில் நிலைகளிலிருந்து முறையே மாலை 05.05, 05.25 மணிக்கு பதிலாக மாலை 05.00, 05.20 மணிக்கு புறப்படும்.
  • வண்டி எண் 05120 பனாரஸ் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்; புதுக்கோட்டை, சிவகங்கை ரயில் நிலையங்களிலிருந்து முறையே மாலை 05.40, இரவு 07.10 மணிக்கு பதிலாக மாலை 05.15, இரவு 07.05 புறப்பட்டு ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு இரவு 11.00 மணிக்கு பதிலாக இரவு 10.30 மணிக்கு வந்து சேரும்.
  • வண்டி எண் 08496 புவனேஸ்வர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்; புதுக்கோட்டை, சிவகங்கை ரயில் நிலையங்களிலிருந்து முறையே மாலை 05.40, இரவு 07.10 மணிக்கு பதிலாக மாலை 05.15, இரவு 07.05 மணிக்கு புறப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details