சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக மீண்டும் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றிபெற்றது. நாசர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று (ஜுன் 2) நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது.