தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'மத ரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தும் பாஜகவுக்கு துணைபோகும் அதிமுக' - குடியுரிமைச் சட்டம்

சென்னை: மாநிலங்களவையில் அதிமுக ஆதரவு அளித்ததால்தான் குடியுரிமை மசோதா சட்டமாக நிறைவேற காரணம் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் குறை கூறியுள்ளார்.

protest
protest

By

Published : Dec 17, 2019, 4:58 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்ததை கண்டித்தும் திமுக சார்பில் சென்னை ஆதம்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் மா. சுப்பிரமணியன் உள்பட திமுகவினர் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழச்சி தங்கபாண்டியன், குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவு அளித்ததால்தான் அது சட்டமாக நிறைவேற வழிவகை ஏற்பட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஆதம்பாக்கத்தில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது என்று பள்ளிக் குழந்தைகளுக்கு கூடத் தெரியும் என்று குறிப்பிட்ட அவர், குடியுரிமைச் சட்டத்திருத்தத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று அதிமுக சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என சாடினார்.

இதையும் படிங்க: குடியுரிமை மசோதா: அதிமுக அரசு தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம் - கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details