தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நடிகர் சௌந்தரராஜாவிற்கு சிறந்த மனித நேய விருது... மலேசிய அமைப்பு கவுரவிப்பு... - Take care international foundation

நடிகர் நடிகர் சௌந்தரராஜாவிற்கு சிறந்த மனித நேய விருது வழங்கி மலேசிய அமைப்பு கவுரவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 7, 2022, 10:47 AM IST

Updated : Sep 7, 2022, 11:18 AM IST

மலேசியாவில் இயங்கி வரும் Take care international foundation என்ற அமைப்பானது ஆண்டுதோறும் “Pride of Humanity" என்கிற பெயரில் சமூக சேவையில் ஈடுபடும் சிறந்த மனிதர்களை தேர்வு செய்து சிறப்பித்து வருகிறது. இந்நிலையில், நடிகர் சௌந்தரராஜாவிற்கு சிறந்த மனித நேய விருது வழங்கியது.

நடிகர் சௌந்தரராஜாவிற்கு சிறந்த மனித நேய விருது வழங்கி மலேசிய அமைப்பு கவுரவிப்பு

தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரம், செடிகளை நட்டு இயற்கை சமூகத்தினை பேணிக்காத்தும், இயற்கை சூழலின் முக்கியத்துவத்தினை மக்களிடம் எடுத்துக் கூறியும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

சிறந்த மனித நேய விருது பெற்ற நடிகர் சௌந்தரராஜா

இவ்வாறு மண்ணுக்கும் மக்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் நடிகர் சௌந்தரராஜாவிற்கு மலேசியாவின் Take care international foundation அமைப்பு சிறந்த மனித நேய விருது வழங்கி கெளரவித்துள்ளது.

இதையும் படிங்க:பிறந்து 12 நாளான குழந்தையுடன் வெள்ளத்தில் தவித்த தாய்...பத்திரமாக மீட்ட பொதுமக்கள்

Last Updated : Sep 7, 2022, 11:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details