சென்னை: தமிழ்நாட்டில் பெரும்பாலும் சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் காவல் துறையினரிடம் அதிகளவில் வந்து குவிகின்றன. இந்தக் குற்றங்களை கண்டறிவதற்கு அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களுடன் அதிநவீன சைபர் ஆய்வகம் ஒன்று சைபர் கிரைம் பிரிவில் செயல்படத் தொடங்கப்பட உள்ளது.
பொதுவாக குற்றவாளிகளின் செல்போன் எண்களை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிய குறைந்தபட்சம் இரண்டு நாள்கள் தேவைப்படும். இந்த அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் ஐந்தே நிமிடத்தில் குற்றவாளிகள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியும் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி தொடர்பான செல்போன் எண் அல்லது கணினியின் ஐபி முகவரி இருந்தால் சம்பந்தப்பட்ட குற்றவாளியின் முழு தொழிற்நுட்ப குற்றங்கள் குறித்த தகவலையும் பெரும்பலான தொழிற்நுட்பத்தை வைத்து சைபர் ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ரூ.5.6 கோடி மதிப்பில் உருவாகும் சைபர் கிரைம் அலுவலகம்
ஹாலிவுட் படங்களிலும் வெளிநாடுகளிலும் உள்ளதுபோல் மிகப் பெரிய திரையில் உயர் அலுவலர்கள் கண்காணித்து உடனடியாக காவல் துறையினருக்கு அறிவுறுத்தி சைபர் கிரைம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் மிகப் பெரிய திரை மூலம் சைபர் குற்றங்களை கண்டுபிடிக்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 5.6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்படவுள்ள சைபர் கிரைம் ஆய்வகத்தில் ஐந்து மென்பொருள் நிபுணத்துவம் மிகுந்த பொறியாளர்கள் காவல் துறையினருக்கு உதவும் வண்ணம் சைபர் கிரைம் ஆய்வகத்தில் பணி அமர்த்தப்படவுள்ளனர்.