சென்னை:சூளைமேடு வீரபாண்டி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர், செல்வம். இவர் செங்குன்றம் பகுதியில் கார் லைனிங் செய்யும் பட்டறை வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்குத் திருமணமாகி பிரகாஷ் (24), நித்தியானந்தம் (21) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இவர்கள் இருவரும் திருமணம் முடித்து தந்தையுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், இளைய மகன் நித்தியனந்தம் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தந்தை செல்வத்துடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றும்(மார்ச்.16) அதேபோல குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நித்தியானந்தத்தை தந்தை செல்வம் கண்டித்ததால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த நித்தியானந்தம் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து செல்வத்தை வயிற்றுப் பகுதியில் குத்திவிட்டு தப்பியோடினார்.