தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான புதிய செயலி - சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா அறிவிப்பு! - மூன்றாம் பாலினத்தவர்கள்

சென்னை: மூன்றாம் பாலினத்தவர்களுக்கென 10 லட்சம் ரூபாய் செலவில் தனியாக புதிய செயலி ஒன்று உருவாக்கப்படும் என சமூக நலம் மற்றும் சத்துணவு நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான புதிய செயலி - சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா அறிவிப்பு!

By

Published : Jul 10, 2019, 7:51 PM IST

மூன்றாம் பாலினத்தவர்களுக்கென தனியாக ஒரு செயலி வரவுள்ளது. இந்த மொபைல் ஆப் 10 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என்று சமூக நலம் மற்றும் சத்துணவு நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

மூன்றாம் பாலினத்தவர்கள் தானாக முன்வந்து தங்களை பதிவு செய்து கொள்ளலாம். அரசின் நலத் திட்டங்களை அறிந்து கொள்ளவும், அவர்களது கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகளின் அடிப்படையில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ளவும், சுயதொழில் மேற்கொள்ள உதவும் வகையிலும் இந்த செயலி பயன்படும் என்று தெரிவித்தார்.

மேலும், இதன் மூலம் அனைத்து மூன்றாம் பாலினத்தவர்களின் வயது, முகவரி, கல்வித்தகுதி பிற பயிற்சிகள் போன்ற விவரங்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டால் அவர்களுக்கு பயனளிக்கும்.

சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் கீழ் உள்ள புதிய அறிவிப்புகள் பின்வருமாறு:

1. 2,167 சத்துணவு மையங்களில் உள்ள பழுதுகளை சரி பார்க்க 2 லட்சத்து 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .


2. மூன்றாம் பாலினத்தவருக்கு தனியாக புதிய செயலி ரூபாய் 10 லட்சம் மதிப்பில் உருவாக்கப்படும்.


3. மூன்றாம் பாலினத்தவர்களில் சிறந்த முன்மாதிரியாகத் திகழும் ஒருவருக்கு, மாநில விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்


4. எல்கேஜி மட்டும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்ட 1 லட்சத்து 350 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய மேசை நாற்காலிகள், ரூ 1,022 கோடி செலவில் 220 அங்கன்வாடி மையங்களுக்கு 22 லட்சம் ரூபாய் செலவில் மின் வசதிகள் மேம்படுத்தப்படும் .

5. 1,137 அங்கன்வாடி மையங்களுக்கு 1 லட்சத்து 14 கோடி ரூபாய் செலவில் தேவையான குடிநீர் வசதி செய்து தரப்படும்

6. 1,282 அங்கன்வாடி மையங்களுக்கு 1 லட்சத்து 54 கோடி ரூபாய் செலவில் குழந்தைகள் நேய கழிப்பிட வசதி செய்து தரப்படும்

7. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 31 மாவட்ட அலுவலகங்களுக்கு புதிய எல்சிடி ப்ரொஜெக்டர் மற்றும் இதர உபகரணங்கள் 21 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்

8. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இணை உணவாக வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவு பயன்பாடு குறித்து ஒரு கோடி ரூபாய் செலவில் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களை மூலம் கள ஆய்வு செய்து விரிவான அறிக்கை தயாரிக்கப்படும்

9. சென்னை கெல்லீஸில் இயங்கி வரும் சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தில் புதிய இரண்டாம் தளம் மற்றும் கூடுதல் வசதிகள் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்

10. இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் கையாளப்படும் குழந்தைகள் குறித்த குழந்தை தகவல் அமைப்பு என்ற புதிய மென்பொருள் 65 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்

11. தஞ்சாவூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அரசு குழந்தைகள் இல்லங்களில் பல்நோக்கு கூடங்கள், செங்கல்பட்டு ஆத்தூர் அரசினர் மாணவர் பாதுகாப்பு நிறுவனத்தில் தொழிற்பயிற்சி மையம் 1 லட்சத்து 30 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

12. ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் உள்ள புதிய வரவேற்பு பிரிவு கட்டடத்தில், அலுவலக கட்டடம் மற்றும் மருத்துவ சிகிச்சை அறை ஆகியவை 1 லட்சத்து 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

ABOUT THE AUTHOR

...view details