தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 30 லட்சத்து 68 ஆயிரத்து 713 பேர் விண்ணப்பம் - tamilnadu election commissioner

சென்னை: வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள இதுவரை 30 லட்சத்து 68 ஆயிரத்து 713 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர்
தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர்

By

Published : Dec 16, 2020, 4:24 PM IST

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, நவம்பர் 16 முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கிடையில், நவம்பர் 21, 22, டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து வேறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடம் பெயர படிவம் 6ஐ 20 லட்சத்து 99 ஆயிரத்து 915 பேரும், பெயர் நீக்க படிவம் 7ஐ 4 லட்சத்து 43 ஆயிரத்து 363 பேரும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8ஐ 3 லட்சத்து 46 ஆயிரத்து 507 பேரும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 (ஏ)ஐ ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 721 பேரும் என மொத்தம் 30 லட்சத்து 68 ஆயிரத்து 713 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் ஜனவரி 5ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்யப்பட்டு ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

ABOUT THE AUTHOR

...view details