தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'சினேகன் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்' - ஆயினும் பின்னடைவு - சினேகன் பெற்ற வாக்குகள்

சென்னை: விருகம்பாக்கம் தொகுதியில் மநீம சார்பாகப் போட்டியிட்ட பாடலாசிரியர் சினேகன் தொடர் பின்னடைவைச் சந்தித்துவருகிறார்.

snehan Continuing setback in Virugambakkam
snehan Continuing setback in Virugambakkam

By

Published : May 2, 2021, 2:42 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது.

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா 11 ஆயிரத்து 50 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் வி.என். ரவி எட்டாயிரத்து 597 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

பின்னடைவில் சினேகன்:

இதே தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக பிக்பாஸ் புகழ் சினேகன் போட்டியிடுகிறார். நண்பகல் நிலவரப்படி சினேகன் ஆயிரத்து 410 வாக்குகள் பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்துவருகிறார்.

சினேகனின் அரசியல் அவதாரம்:

பிரபல பாடலாசிரியரான இவர் 2018ஆம் ஆண்டு கமல் ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து கட்சியின் செயற்குழு உறுப்பினராகப் பதவி வகித்துவருகிறார். இவர் 2019ஆம் ஆண்டு சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 22 ஆயிரத்து 951 வாக்குகளைப் பெற்றார்.

ABOUT THE AUTHOR

...view details