சென்னை: இலங்கையிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானப் பயணிகளிடம் சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மூன்று பயணிகளின் உள்ளாடைகளுக்குள் தங்கப்பசைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், மூவரையும் கைது செய்தனர்.
சென்னையில் ரூ.37.88 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னைக்கு விமான நிலையத்தில் ரூ.37.88 லட்சம் மதிப்புள்ள 852 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
smuggling-gold-seized-in-chennai-airport-today
முதல்கட்ட தகவலில், மூன்று பயணிகளும் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் கடத்தி வந்த 852 கிராம் தங்கப்பசையின் மதிப்பு, ரூ.37.88 லட்சம் என்பதும் தெரியவந்துள்ளது. கடந்த வாரம் துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் கழிவறைக்குள் பதுக்கிவைத்திருந்த கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ரூ.30 லட்சம் மதிப்பிலான 600 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்!