தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் ரூ. 44,25,000 மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் - gold seized in chennai

துபாயிலிருந்து சென்னைக்கு உள்ளாடையில் வைத்து கடத்திவரப்பட்ட ரூ. 44 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 990 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

smuggled gold
smuggled gold

By

Published : Feb 11, 2022, 8:41 PM IST

சென்னை:துபாயிலிருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு இன்று(பிப்.11) பயணிகள் விமானம் வந்தடைந்தது. இந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 32 வயது மதிக்கத்தக்க, ஒருவர் உள்ளாடைக்குள் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த அலுவலர்கள், தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

முதல்கட்ட தகவலில்,"கைது செய்யப்பட்டவர், சென்னையை சேர்ந்த யாசர் அரபாத் என்பதும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 990 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ. 44 லட்சத்து 25 ஆயிரம் என்பதும் தெரியவந்தது. முன்னதாக சென்னையிலிருந்து இலங்கைக்கு விமானம் மூலம் கடத்த முயன்ற ரூ.24.29 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சென்னையில் ரூ.47.73 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details