சென்னை:இலங்கையிலிருந்து சென்னை விமானநிலையத்திற்கு இன்று(டிச.23) ஏா் இந்தியா விமானம் வந்தது. இந்த விமானப் பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது, இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் சந்தேகத்திற்கிடமாக நடந்துகொண்டனர்.
இதனால் சந்தேகமடைந்த அலுவலர்கள், அவர்களிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களது உள்ளாடைகளுக்குள் மறைந்து எடுத்துவந்த 1.55 கிலோ எடையுள்ள கடத்தல் தங்கம் சிக்கியது.