இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று சென்னை சா்வதேச விமானநிலையத்தற்கு வந்தது. அதில், வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.
அந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர் தன்னிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருள்கள் எதுவும் இல்லை என்று கூறி, கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்றாா்.
அவரை சுங்கத்துறையினர் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது தங்க பசை உடைய ஒரு பொட்டலத்தை உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனர். அதில் ரூ.11.73 லட்சம் ரூபாய் மதிப்பிலான 266 கிராம் தங்கப்பசை இருந்தது தெரிய வந்தது.
இதோபோல் துபாயிலிருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணியை சோதனையிட்டதில் ரூ.18.88 லட்சம் மதிப்புடைய 428 கிராம் தங்கப்பசை, தங்க செயின் மற்றும் ரூ.4.78 லட்சம் மதிப்புடைய மின்னணு சாதனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதோடு பயணியையும் சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
சென்னை சா்வதேச விமானநிலையத்தில் அடுத்தடுத்து வந்த இரு விமானங்களில் வந்த இரு பயணிகளை சுங்கத்துறை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.35.39 லட்சம் மதிப்புடைய தங்கம், மின்னணு சாதனங்களை இன்று பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:மாற்றுத் திறனாளி வீராங்கனைகளிடம் பாரபட்சம் கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்