சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருட்கள் வரவிருப்பதாக, விமானநிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிரக் கண்காணிப்பில் இருந்து வந்தனர். அப்போது மலேசியாவிலிருந்து சென்னை வந்தடைந்த விமானம் ஒன்றில் வந்த, சென்னையைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் (51) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி அலுவலர்கள் விசாரித்தனர். அப்போது அலுவலர்களின் கேள்விக்கு முன்னுக்குப்பின் முரணாக அப்துல் அஜீஸ் பதிலளித்துள்ளார். எனவே சந்தேகம் வலுவடைந்து அவரது உடமைகளை சோதனைக்கு உட்படுத்தியபோது, ஐந்து மின்சார சாக்கெட்டுகள் மற்றும் அவரது ஜீன்ஸ் பேண்ட் ஆகியவற்றில் சிறு சிறுத் துண்டுகளாக தங்கக்கட்டிகளை மறைத்து வைத்து, அஜீஸ் கடத்தி வந்திருப்பதை அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.
கடத்தி வரப்பட்ட 290 கிராம் தங்கம் - சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!
சென்னை விமான நிலையத்திற்கு தங்கக்கட்டிகள் கடத்திவந்த, மலேசியாவைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவரை, சுங்கத்துறை அலுவலர்கள் கையும் களவுமாகப் பிடித்தனர்.
மொத்தம் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 290 கிராம் தங்கத்தை, சுங்கத்துறை அலுவலர்கள் அவரிடமிருந்துப் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக பிடிபட்ட அப்துல் அஜீஸிடம் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.
Last Updated : Sep 21, 2019, 7:51 PM IST