தமிழ்நாட்டில் மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் மூன்று கோடியே 60 லட்சம் மின் இணைப்புகள் இருக்கின்றன.
மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை தியாகராய நகரில் ஒரு லட்சத்து 41 ஆயிரம் மின் இணைப்புகளில், முதற்கட்டமாக 90 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்கள் சோதனை அடிப்படையில் நாளை (மார்ச்.01) முதல் பொருத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில், இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்த காரணத்தினால் மீண்டும் திமுக ஆட்சி வந்தவுடன் இத்திட்டத்தை சோதனை முறையில் தொடங்க முடிவெடுக்கப்பட்டு, திட்ட செலவாக 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.