தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையை இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் கூறுகையில், "விவசாயிகள் இரவு நேரங்களில் வயல்களுக்கு நேரில் சென்று பம்புசெட்டுகளை இயக்கும் பொழுது ஏற்படும் பாம்புக்கடி, காயமடைதல் போன்ற இடர்பாடுகளைத் தவிர்க்க செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட்டு கருவிகள் வழங்கப்படஉள்ளன.
3,000 விவசாயிகளுக்கு செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட்டுகள்
மூன்றாயிரம் விவசாயிகளுக்கு செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட்டு கருவிகள் வழங்கப்படும் என்று என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் விவசாயிகள் பாசன வயலிலுள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்புசெட்டுகளைத் தொலைவில் இருந்து செல்போன் மூலம் இயக்கிகொள்ள முடியும். இந்த கருவிகள் 50 விழுக்காடு மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய் மானியத்தில் வழங்கப்படும். குறிப்பாக 2022-23 ஆம் நிதியாண்டில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுள்ள மூன்று ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ. 195