தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு! - Smart card for govt. school teachers
சென்னை: அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வருகையை பதிவிடுவதற்கு கியூஆர் குறியீட்டுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு தயாரிப்பதற்கான பணியை பள்ளிக்கல்வித் துறை தொடங்கியுள்ளது.
![அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5127022-32-5127022-1574274110130.jpg)
அதன் அடிப்படையில் தற்போது ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களின் பணிமாறுதல், பதவி உயர்வு, கலந்தாய்வு ஆகியவை நிறைவு பெற்று பணியிடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களின் முழுமையான தகவல், புகைப்படங்கள், கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்தப் பணிகள் முடிவுற்றால்தான் திறன் அட்டைகள் அச்சடிக்கும் பணி தொடங்கப்படும். அவ்வாறு ஆசியர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்யத் தவறும் அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.