சென்னை: அண்ணாப் பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழகத்திலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதையடுத்து சென்னை அண்ணாப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 40 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் 6 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அரசு அலுவலர்களை தகாத வார்த்தையால் பேசிய அதிமுக எம்எல்ஏ: ஏன் தெரியுமா?