தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊரடங்கு 4.0 ஆரம்பம்: தற்போது வரை ரூ. 6 கோடி அபராத வசூல் - Lockdown cases

சென்னை: நான்காம் கட்ட ஊரடங்கு நாளை தொடங்கவுள்ள நிலையில், தற்போது வரை ஊரடங்கை மீறி வாகனம் ஓட்டியவர்களிடமிருந்து 5,91,53,754 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை மீறிய மக்கள்! தீவிரம் காட்டிய காவல்துறை1
ஊரடங்கை மீறிய மக்கள்! தீவிரம் காட்டிய காவல்துறை1

By

Published : May 17, 2020, 6:47 PM IST

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. உத்தரவை மீறிய இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

ஊரடங்கை மீறிய மக்கள்! தீவிரம் காட்டிய காவல்துறை1

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து 54 நாள்களான நிலையில், காவல் துறை இதுவரை தடையை மீறியதாக 4 லட்சத்து 83 ஆயிரத்து 501 பேரை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது. 3 லட்சத்து 97 ஆயிரத்து 692 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளது.

மேலும், இதுவரை அபராதமாக 5 கோடியே 91 லட்சத்து 53 ஆயிரத்து 754 ரூபாய் வசூலித்துள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு மே 31 வரை ஊரடங்கை நீட்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details