சென்னை:இலங்கையில் இருந்து விமானங்களில், பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாகவும், இந்த கடத்தலில் இலங்கையைச் சேர்ந்த பெண் பயணிகள் அதிக அளவில் ஈடுபடுவதாகவும், சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், இன்று (ஆக.27) இலங்கையின் தலைநகா் கொழும்பு நகரில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா விமானங்களில் தனித்தனியாக வந்த பயணிகளை பெண் சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் தீவிர சோதனையில் சோதனையிட்டனா்.
அப்போது அதில் 4 இலங்கை பெண் பயணிகள் மற்றும் ஒரு ஆண் பயணியை சோதனையிட்டதில், மொத்தம் 5 பயணிகள், உள்ளாடைகள் அவர்களின் பைகளில் ரகசிய அறைகள் போன்றவைகளில் மறைத்து வைத்து எடுத்து வந்த தங்கப் பசைகள், தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டிகளையும் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கம் அதைப்போல், கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகளை சோதனை செய்தபோது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த பயணி ஒருவர், அவரின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த தங்கப் பசையை பறிமுதல் செய்தனா். மேலும் சென்னை சர்வதேச விமான நிலைய வருகைப் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியை விமான ஊழியர்கள் சுத்தம் செய்தபோது, அதற்குள் ஒரு பார்சல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை பிரித்து பார்த்தபோது, அதில் ஒரு கிலோ தங்கப் பசை இருந்ததை கண்டுபிடித்து அதையும், சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சுங்கச் சோதனையில் மொத்தம் ரூ.3 கோடி மதிப்புடைய 6.2 கிலோ, தங்கப் பசை, தங்க கட்டிகள், தஙக நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 4 இலங்கை பெண் பயணிகள் உட்பட 6 பேரை சுங்கத்துறையினர் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்ப பிரச்சனைக்காக விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபர் கைது