சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுசீல்ஹரி சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் அவருக்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு, தற்போது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு விசாரணையில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 2012 ஏப்ரல், மே மாதத்தில் பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா, ஆசிரியை தீபா, பக்தர் கருணாம்பிகை, பாரதி, நீரஜ் ஆகியோர் மீது மூன்றாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா, தீபா உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து 2021ஆம் ஆண்டு புகாரை பெற்றுள்ளனர். மேலும், அதற்காக பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தவறு.