சென்னை: சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சூரி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டான்'.
லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தினை, அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.
ரசிகர்கள் உடன் படம் பார்த்த சிவகார்த்திகேயன் அனிருத் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இப்படம் தமிழ்நாடு முழுவதும் இன்று (மே.13) வெளியாகியுள்ளது. அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இன்று அதிகாலை சென்னையில் உள்ள ரோகிணி, காசி, வெற்றி ஆகிய திரையரங்குகளில் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுடன் படம் பார்த்து ரசித்தார்.
இதையும் படிங்க:ஹன்சிகாவின் 'மஹா' படத்தின் ரிலீஸ் தேதி இது தான்