தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'இரக்கமின்றி அழுத்தம் கொடுத்தார் சிவகார்த்திகேயன்'- ஞானவேல் ராஜா - இரக்கமின்றி அழுத்தம் தந்தார் சிவகார்த்திகேயன்

பல உண்மைகளை மறைத்து நடிகர் சிவகார்த்திகேயன் மனுத்தாக்கல் செய்துள்ளார், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன் மீது ஞானவேல் ராஜா குற்றச்சாட்டு
சிவகார்த்திகேயன் மீது ஞானவேல் ராஜா குற்றச்சாட்டு

By

Published : Mar 31, 2022, 2:03 PM IST

சென்னை: மிஸ்டர் லோக்கல் படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 10 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.

படம் எடுக்க முடியாத நிலையில், மீண்டும் 2018ஆம் ஆண்டு புது ஒப்பந்தம் போடப்பட்டு சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 12 கோடியே 78 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.

ஆனால் மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை எனவும், படத்தின் இயக்குநராக ராஜேஷ் தான் வேண்டுமென சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தினார். அந்த படத்தால் 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வரிகளுடன் சேர்த்து மீதம் 2 கோடியே 40 லட்சம் ரூபாயை வழங்க வேண்டுமென நடிகர் சிவகார்த்திகேயன், இரக்கமின்றி அழுத்தம் தந்தார்.

மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்த நிலையில், 2 கோடியே 40 லட்சம் தர வேண்டாம், வினியோகஸ்தர்கள் பிரச்சனையில் சிக்க வைத்து விட வேண்டாம் என சிவகார்த்திகேயன் கூறினார்.

மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், உண்மை தகவல்களை மறைத்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்" என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குறிப்பிட்டுள்ளார்.

ஞானவேல் ராஜா தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் பதில் மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று (மார்ச் 31) நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வழக்கின் விசாரணையை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:கேரள பகவதி அம்மன் கோயிலில் அஜித் குமார் தரிசனம்!

ABOUT THE AUTHOR

...view details