தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பச்ச கல்லு மூக்குத்தி பாடகிக்கு வந்த மிரட்டல்: காவல் ஆணையரிடம் புகார் - காவல்துறையில் புகார்

விவாகரத்துப் பெற்ற பிறகும் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தும், தனக்குக் கொலை மிரட்டலும் விடுப்பதாக முன்னாள் கணவர் மீது கானா பாடகி இசைவாணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

பாடகி
பாடகி

By

Published : Jan 7, 2022, 9:08 PM IST

சென்னை: பல்வேறு சமூக கருத்துகள் நிறைந்த கானா பாடல்களைப் பாடி பிரபலமானவர் இசைவாணி. தற்போது பல்வேறு தமிழ் சினிமாக்களிலும் பாடல்கள் பாடிவருகிறார். இந்நிலையில் சினிமா பாடகியான இசைவாணி இன்று சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது முன்னாள் கணவரான சதீர் (எ) பப்லு மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் தனக்கும் சதீஷுக்கும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணமான நிலையில், குழந்தை இல்லை எனக்கூறி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலே பிரிந்து வாழத் தொடங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இருவரும் சேர்ந்து வாழ முடியாது என முடிவெடுத்து குடும்பநல நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து தாக்கல்செய்ததாகவும், அதனடிப்படையில் நீதிமன்றம் தங்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்கி 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

பெயருக்கு கலங்கம்; ஏன் எனக் கேட்டால் 'ஆசிட் அடிப்பேன்' என மிரட்டல்

தற்போது, தங்கள் இருவருக்கும் விவாகரத்து ஆன பின்பும் சதீஷ் (எ) பப்லு தாங்கள் திருமணமானபோது சேர்ந்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தன்னை அவரது மனைவி எனப் பிரகடனம் செய்துவருவதோடு, தன் பெயரைக் கூறி பல கச்சேரிகளுக்குத் தன்னை பாட வைப்பதாக முன்பணம் பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கானா பாடகி இசைவாணி
தான் தற்போது கச்சேரிகளில் பாடுவதை நிறுத்திவிட்டதால் கச்சேரிக்கு சதீஷிடம் முன்பணம் அளித்தவர்கள் தன்னை தொடர்புகொண்டு கச்சேரியில் பாடவில்லையென்றால் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டு தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இது குறித்துத் தான் இன்ஸ்டாகிராம் மூலமாக சதீஷை தொடர்ந்துகொண்டு கேட்டபோது, "நான் அப்படித்தான் செய்வேன், உன்னால் என்ன செய்ய முடியும்?" எனத் தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், "நீ தனியாக வரும்போது ஆசிட் அடித்து விடுவேன், உன்னைக் கொலை செய்துவிடுவேன்" எனக் கூறி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

காவல் துறையில் புகார்

எனவே தனக்கு விவாகரத்தான பிறகும் தன்னை அவரது மனைவி எனக் குறிப்பிட்டு இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தும், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டும், தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

எனவே, சதீஷ் (எ) பப்லு மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, தனது அனுமதி இல்லாமல் சதீஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள தன் புகைப்படங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் புகாரில் திரைப்பட பாடகி இசைவாணி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளி கட்டடத்தை இடித்துத் தள்ளிய அதிமுக கவுன்சிலர் கைது

ABOUT THE AUTHOR

...view details