தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'சிங்காரச் சென்னை 2.0' - இந்தாண்டுக்கு மட்டும் ரூ.500 கோடி ஒதுக்கீடு - Tamilnadu Government

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு விரிவான வழிகாட்டுதல்களைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

சிங்காரச் சென்னை 2.0
சிங்காரச் சென்னை 2.0

By

Published : Sep 29, 2021, 5:02 PM IST

Updated : Sep 29, 2021, 6:10 PM IST

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சரியான முன்னேற்றம் இல்லாததால், அங்கு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் - சென்னை மாநகர கட்டமைப்பை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கிலும் சிங்காரச் சென்னை 2.0 என்னும் புதிய திட்டம் தமிழ்நாடு அரசால் தீட்டப்பட்டுள்ளது.

இவ்வாண்டு இத்திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன், வேறு பல திட்டங்களை இணைத்து இப்பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள், சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பழமையான கட்டடங்கள், நகர்ப்புற நில மேம்பாடு, உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக பல்வேறு தலைப்புகளில் விரிவான வழிகாட்டதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பசுமைச் சென்னை, தூய்மைச் சென்னை, நீர்மிகுச் சென்னை, எழில்மிகுச் சென்னை, நலம் மிகுச் சென்னை, கல்விமிகுச் சென்னை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின்கீழ் சிங்காரச் சென்னை 2.0 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சிங்காரச் சென்னை 2.0

இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவுத்திட்டம் : சிங்கார சென்னை 2.0!

Last Updated : Sep 29, 2021, 6:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details