சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, இந்தியாவிற்கான சிங்கப்பூர் நாட்டின் தூதர் சைமன் வாங் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது முதலமைச்சர் சென்னையில் அமையவுள்ள சிங்கப்பூர் நாட்டின் Capitaland நிறுவன வளாகத்தில் நடுவதற்காக மரக்கன்றினை அதன் தலைவர் சி.வேலனிடம் வழங்கினார்.
இந்தச் சந்திப்பின்போது, தலைமைச் செயலர் சண்முகம், சென்னையிலுள்ள சிங்கப்பூர் நாட்டுத் தூதரத்தின் தூதர் போங் காக் தியன் (Pong Kok Tian) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
மேலும் மற்றொரு நிகழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில், அனைத்து அகமுடையார் கூட்டமைப்பு - தமிழ்நாடு நிறுவனத் தலைவர் கே.சி. ராஜ்குமார், மாநில பொதுச்செயலாளர் ஏ.எம்.நெல்லை குமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, மருதுபாண்டியர்களின் குருபூஜை விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினர். உடன் வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உடன் இருந்தார்.