தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகளையும் பருவத்தேர்வுகளையும் ஒன்றாக நடத்த முடிவு - அம்பேத்கர் பல்கலை. பதில் - Chennai High court updates

சட்டப் படிப்புகளுக்கான பருவத்தேர்வுகளோடு ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாக சேர்த்து ஜனவரி 6ஆம் தேதி நடத்தப்படும் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகளையும் பருவத்தேர்வுகளையும் ஒன்றாக நடத்த முடிவு - அம்பேத்கர் பல்கலை பதில்
ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகளையும் பருவத்தேர்வுகளையும் ஒன்றாக நடத்த முடிவு - அம்பேத்கர் பல்கலை பதில்

By

Published : Dec 18, 2020, 8:15 PM IST

ஊரடங்கு காரணமாக, அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், சட்டப்படிப்பிற்கான அரியர் தேர்வுகளை நடத்த உத்தரவிடக்கோரி, சஞ்சய் காந்தி என்ற சட்டக்கல்லூரி மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ஜனவரி 6ஆம் தேதி முதல் பருவத்தேர்வுகளோடு சேர்த்து அரியர் தேர்வுகளையும் ஆன்லைன் வாயிலாக நடத்த உள்ளதாகவும் அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரியர் மாணவர்களின் நலன் கருதி அவர்களின் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வெழுதுவதால், அரியர் மாணவர்களுக்கான முடிவை மட்டும் தனியே வெளியிடுவதில் சிரமம் இருப்பதாகவும், எனினும் அது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: 20% இடஒதுக்கீடு கோரி போராடிய பாமக மீதான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details