தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன் காரணமாக பிப்ரவரி 28ஆம் தேதிமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
அதனடிப்படையில் தேர்தல் பறக்கும் படையினர், கண்காணிப்புக் குழுவினர், காவல் துறையினர் முதல்கட்ட தேர்தல் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
முன்னதாக, சென்னை காவல் மாவட்டத்திலுள்ள உரிமம் பெற்று வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவிட்டனர். அதன்படி, துப்பாக்கிகள் பெறப்பட்டுவருகின்றன.
இதுவரை ஆயிரத்து 327 துப்பாக்கிகள் பெறப்பட்டுள்ளன. நான்கு ரவுடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனிடையே குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் 828 குற்றவாளிகளிடம் ஆறு மாதம் எவ்விதக் குற்றங்களிலும் ஈடுபடாமலிருக்க பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
இதையும் படிங்க:உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 4 பேர் கைது!