சென்னை சாலிகிராமத்தில் வசித்துவரும் சித்த மருத்துவர் வீரபாபு(45) அரசு அனுமதி பெற்று கரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளித்து வருகிறார்.
அதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக வலைதளத்தில் மருத்துவ ஆலோசனை காணொலிகளையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒருவர் அவரது மருத்துவம் பொய்யானவை எனக் கூறி, தொடர்ந்து தகாத வார்த்தைகளால் கருத்து தெரிவித்து வந்துள்ளார். அதனால் வீரபாபு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.