சென்னை:தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவத் துறையால், சித்த மருத்துவ ஆசிரியர்களுக்கான 'சித்த மருத்துவ ஆய்வு முறைகள்' குறித்த மருத்துவத் தொடர் கல்வி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சி செய்ய வேண்டிய தலைப்புகள், ஆராய்ச்சி செய்யும் முறைகள் குறித்து மருத்துவ ஆய்வுக்கான திட்ட அறிக்கை தயாரித்தல், பல்வேறு வகையிலான ஆராய்ச்சி முறைகள், ஆய்வுக்கான தரவுகளைத் தேடிச் சேகரித்தல், புள்ளியியல் பகுப்பாய்வு, ஆய்வுக்கான நிதியுதவி பெற விண்ணப்பித்தல், ஆய்வறிக்கை தயாரித்துச் சமர்ப்பித்தல் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் மரு.சுதா சேஷய்யன், 'தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் சித்தர்களின் கண்டுபிடிப்பினால், சித்த மருத்துவம் ஓங்கி வருகிறது.
இருப்பினும் தேவநேயப்பாவாணர் போன்ற தமிழ் அறிஞர்கள் எல்லாம் போற்றியும் சித்த மருத்துவத்தைக் கையாள்வதில் சற்று தடை இருப்பதாகத்தான் தோன்றுகிறது.
'கரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவத் தீர்வு'
சித்தர்களின் மருத்துவம், விஞ்ஞான வழியாக வருவதற்கு முன்னரே பயன்பாட்டிற்கு வந்திருந்தாலும், சித்த மருத்துவத்தை அணுகும்முறை மக்களிடையே குறைவாகவே உள்ளது.