இது தொடர்பாக சென்னை லயோலா கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவினை பேராசிரியர் வின்சென்ட் வெளியிட்டு பேசியபோது, “லயோலா கல்லூரி, மெக்கல்லே பல்கலைக்கழகம் மற்றும் தென் கொரியாவின் செஜோங் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில் மூலக்கூறு உயிர் அறிவியல் உள்ள எல்லைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் மூலம் சித்த சூத்திரமான கபசுரக் குடிநீரை, சார்ஸ், கோவிட் வைரசுக்கு எதிராக இன்சிலிகோ ஆராய்ச்சி முறையை பயன்படுத்துவதாகும்.
கபசுரக் குடிநீர் சித்த சூத்திரத்தில் 15 மருத்துவ தாவரங்கள் உள்ளன. உயிரியல் செயல்பாடுகளின் அடிப்படையில் கபசுரக் குடிநீரிலிருந்து 145 சேர்மங்களை தேர்ந்தெடுத்துள்ளோம். அடையாளம் காணப்பட்ட 15 சாத்தியமான சிகிச்சை கூறுகள் மூலம் கபசுரக் குடிநீர் பருகும் நபர்களுக்கு, செல்லுடன் வைரஸ் நோய் தொற்று பாதிக்காமல் தடுக்கிறது.
எனவே 50 சதவீத சித்த, ஆயுர்வேத மருத்துவத்துடன், 50 சதவீத அலோபதி மருத்துவம் இணைந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. உருமாறிய கரோனா வைரஸ் தொற்றையும் கபசுரக் குடிநீரால் கட்டுப்படுத்த முடியும் ” எனக் கூறினார்.
இதையும் படிங்க:கோவாக்சின் சோதனை தடுப்பூசியைப் செலுத்திக்கொண்ட எய்ம்ஸ் மருத்துவர்!