தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'வில்சன் கொலை வழக்கு': தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பு - National Intelligence Agency investigation

சென்னை: காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை விசாரணை தனிப்படையிடமிருந்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரணைக்கு இன்று மாற்றப்பட்டது.

வில்சன் கொலை வழக்கு
வில்சன் கொலை வழக்கு

By

Published : Feb 2, 2020, 1:01 PM IST

குமரி மாவட்டம், களியக்காவிளை சுங்கச்சாவடி அருகே சிறப்பு காவல்துறை உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக தனிப்படை நடத்திய விசாரணையில் அப்துல் சமீம், தவ்பீக் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இவ்வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு பிரிவு விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இன்று இவ்வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் ஏற்கெனவே 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) வழக்கை எடுத்துள்ள நிலையில், தீவிர விசாரணை நடத்தப்பட்டு கொலையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திருந்தி வாழ அனுமதிக்கக் கோரி சென்னை ஆணையரிடம் வழிப்பறிக் கொள்ளையன் மனு!

ABOUT THE AUTHOR

...view details