சென்னைபூக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சேகர். இவர் சமீபத்தில் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி தொடர்பாக கருத்து ஒன்றைப் பதிவிட்டார்.
அந்தப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து விசாரணை நடத்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
திமுக குறித்து கருத்துப் பதிவிட்ட எஸ்ஐ விசாரணையில் உதவி ஆய்வாளர் சேகர் அது தனது ஃபேஸ்புக் கணக்கு இல்லை எனவும் தனது பெயரில் போலியாக யாரோ ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி அவதூறு கருத்தை பதிவிட்டுள்ளதாக வாக்குமூலம் அளித்திருந்தார். ஆனால், தனது பெயரில் போலியான ஃபேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டது தொடர்பாக உதவி ஆய்வாளர் சேகர் தரப்பில் எந்தவித புகாரும் அளிக்கப்படவில்லை என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் அவதூறு கருத்தைப் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரத்தில் பூக்கடை உதவி ஆய்வாளர் சேகரை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா 3ஆவது அலை: கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு