தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காவலர்களால் தாக்கப்பட்ட உணவக உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு - hotel owner attack case villpuram

பொய் வழக்கில் காவலர்களால் தாக்கப்பட்ட உணவக உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

shrc tamilnadu
shrc tamilnadu

By

Published : Feb 17, 2022, 8:47 PM IST

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த கே.ஜெயபாலன் என்பவர் 2016ஆம் ஆண்டு மாநில மனித உரிமை ஆணையத்திடம் அளித்த மனுவில், "விக்கிரவாண்டியலில் உள்ள எனது உணவகத்திற்குள் ஜனார்த்தனன், ஆறுமுகம் ஆகியோர் அத்துமீறி நுழைந்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தேன்.

ஆனால் புகாரை ஏற்காமல் ஆய்வாளர் செந்தில்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் சின்னப்பன் ஆகியோர் என்னை கண்மூடித்தனமாக தாக்கினர். அதுமட்டுமல்லாமல் ஆறுமுகம் அளித்த புகாரின் அடிப்படையில் என்னை கைது செய்து, காவல்நிலையத்தில் வைத்து தக்கினர். எனவே காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

இதுதொடர்பான விசாரணையில் காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்பட்டதும், பொய் வழக்கு போட்டதும் தெரியவந்தது. அதன்படி மாநில மனித உரிமைகள் ஆணையம், ஜெயபாலனுக்கு 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. அந்த தொகையை ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சின்னப்பனின் ஊதியத்திலிருந்து தலா 50 ஆயிரம் ரூபாய் என்று பிடித்தம் செய்துகொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க:ஓட்டுநருக்குத் துன்புறுத்தல்: காவலர்களுக்கு ரூ. 4.5 லட்சம் அபராதம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details