தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுமி வயிற்றில் இரும்பு துகள் - ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க மருத்துவர்களுக்கு உத்தரவு

விபத்தில் சிக்கிய சிறுமியின் வயிற்றில் இருந்த, இரும்பு துகளை அகற்றாததால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்க்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தமிழ்நாடு அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

By

Published : Apr 20, 2022, 2:30 PM IST

மாநில மனித உரிமைகள் ஆணையம்
மாநில மனித உரிமைகள் ஆணையம்

சென்னை: குரோம்பேட்டை ரெங்காநகரைச் சேர்ந்த சுதா, மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2018ஆம் ஆண்டு கார் மோதியதில் காயமடைந்த எனது மகள் கவிநயா, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், மகளின் அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.

பின் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, 'எக்ஸ்ரே' எடுத்து பார்த்தபோது மகளின் அடிவயிற்றில் சிறிய இரும்புத்துண்டு ஒன்று இருப்பது தெரியவந்தது. அதன்பின்னர், அறுவை சிகிச்சை மூலம் இரும்பு துண்டு அகற்றப்பட்டது.

இது, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்களிகளின் கவனக்குறைவால் குழந்தை கடுமையான பாதிப்புக்குள்ளானது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை. ஜெயச்சந்திரன், "சிறுமிக்கு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் வகுத்துள்ள மருத்துவ நெறிமுறைகள்படி, முறையாக சிகிச்சை வழங்காததால் சிறுமி கவிநயா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

அதனால், மனுதாரருக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மருத்துவரின் கவனக்குறைவால் உயிரிழந்த பெண்ணுக்கு இழப்பீடு

ABOUT THE AUTHOR

...view details