தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பேட்மிண்டன் வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படாதது ஏன்? - சு. வெங்கடேசன் கேள்வி - மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன்

முப்பத்து ஏழு ஆண்டுகளாக எந்தவொரு பூப்பந்து வீரருக்கும் அர்ஜுனா விருது வழங்கப்படவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Arjuna Award issue, Arjuna Award, Su Venkatesan MP, SuVe4Madurai, su venkatesan latest news, su venkatesan about arjuna award, su ve questions in parliament, Ministry of Youth Affairs and Sports, Anurag Singh Thakur answers, Anurag Singh Thakur, சு வெங்கடேசன் எம் பி, சு வெங்கடேசன் செய்திகள், விளையாட்டுத்துறை அமைச்சர், அனுராக் சிங் தாகூர், அர்ஜுனா விருது, அர்ஜுனா விருது சர்ச்சை, no arjuna for badminton sport, arjuna award for badminton, பூப்பந்து விளையாட்டு, பூப்பந்து அர்ஜுனா விருது, மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன், நாடாளுமன்ற கேள்வி பதில்
மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன்

By

Published : Dec 2, 2021, 1:29 PM IST

மதுரை: சு. வெங்கடேசன் எம்பி, மக்களவையில் எழுப்பியிருந்த கேள்விக்கு (எண் 313-க்கு) ஒன்றிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள சு. வெங்கடேசன், "அர்ஜுனா விருதுக்கான விளையாட்டுகளின் பட்டியலில் பூப்பந்து உண்டா? என்ற கேள்விக்கு 'ஆம்' என்று பதில் அளித்துள்ளார். இதுவரை அர்ஜுனா விருது பெற்றவர்களின் பட்டியலையும், வழங்கிய ஆண்டையும் குறிப்பிட்டு வழங்கியுள்ளார். அதில்,

  1. ஜே.பிச்சையா (1970)
  2. ஜெயராமா ஶ்ரீநிவாஸ் (1972)
  3. ஏ. கரீம் (1973)
  4. எல்.ஏ. இக்பால் (1975)
  5. ஏ. சாம் கிறிஸ்து தாஸ் (1976)
  6. டி. இராஜாராமன் (1984)

ஆகிய பெயர்கள் அடங்கியிருந்தன. இந்த விவரங்கள் அதிர்ச்சியைத் தருவதாக உள்ளன. 1961ஆம் ஆண்டு முதல் அர்ஜுனா விருது தர ஆரம்பித்ததிலிருந்து, இதுவரை 916 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், ஆறு பேர் மட்டுமே பூப்பந்து வீரர்கள். கடைசியாய் அந்த விருது பூப்பந்து வீரருக்கு வழங்கப்பட்ட ஆண்டு 1984. முப்பத்து ஏழு ஆண்டுகளாக எந்தவொரு பூப்பந்து வீரருக்கும் இந்த விருது வழங்கப்படவில்லை.

பூப்பந்து இந்தியாவில் மட்டுமின்றி நேபாளம், இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, மியான்மர், பாகிஸ்தான், பூடான், வங்கதேசம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் விளையாடப்படுகிறது. இத்தகைய விளையாட்டு அர்ஜுனா விருது பரிசீலனையில் புறக்கணிக்கப்படுவதாக பூப்பந்து வீரர்கள் மத்தியில் அழுத்தமான ஆதங்கம் உள்ளது. மேற்கூறிய விவரங்கள் அந்த ஆதங்கத்தில் நியாயம் இருக்கிறது என்பதையே உணர்த்துகிறது.

ஆகவே, இன்று ஒன்றிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை உரிய மட்டத்தில் ஆய்வுசெய்து பூப்பந்து விளையாட்டிற்கு நீதி வழங்க வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தூத்துக்குடி - நெல்லை சாலையில் பாலம் கட்டியதில் முறைகேடு - நீதிமன்றம் எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details