இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "இன்றைக்கு நாடு எந்த நிலைமையில் இருக்கிறது என்று நான் சொல்ல வேண்டியதில்லை, உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும்தான் தெரியவில்லை. கரோனா நாளுக்கு நாள் அதிகமாகப் பரவி வரும் போது ஊரடங்கை தளர்த்தினார்கள். மதுக்கடைகளைத் திறந்தார்கள். பத்தாம் வகுப்பு தேர்வை நடத்துவேன் என்று சொன்னார்கள். இவ்வளவையும் செய்தவர்கள் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்தார்களா என்றால் இல்லை.
ஒருபக்கம் கரோனா வாட்டி வருகிறது என்றால், மற்றொரு பக்கம் முதலமைச்சர் பழனிசாமி மக்களை வாட்டி வதைக்கிறார். கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டால் மக்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைவார்களோ, அதைவிட அதிகமாக ஒவ்வொரு வீட்டுக்கும் வந்திருக்கின்ற மின்கட்டணத்தை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மின் கட்டணத்தை பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது.